How to create a website in 10 mins in Tamil | வெப்சைட் தொடங்குவது எப்படி?

 வணக்கம்,

 அனைவரும் வலைதளம் எப்படி தொடங்கி அதில் சம்பாதிப்பது என்று தேடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான சிறந்த வழிகாட்டுதல் யாருக்கும் கிடைப்பதில்லை. அப்படித் தேடிக் கொண்டு இருப்பவரா நீங்கள் உங்களுக்கான பதிவு தான் இது.

இந்தப் பதிவைப் படித்து முடித்த 10 நிமிடத்தில் நீங்கள் ஒரு வலைத்தள பக்கத்தை எளிதில் உருவாக்கலாம். இதற்கு தேவையானவை உங்களிடம் ஒரு ஹோஸ்டிங் மற்றும்  டொமைன் இருந்தாலே போதும். அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் தவறான  ஹோஸ்டிங் தேர்ந்தெடுப்பது. சரியான இடத்தில் ஹோஸ்டிங் தேர்ந்து எடுத்தால் வெற்றி நிச்சயம்.

 வெப்சைட் உருவாக்க  தேவையானவை:

  1. உங்களுக்கு தேவையான மற்றும் சரியான ஹோஸ்டிங் தளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2. உங்களுக்கு வேர்ட்பிரஸ் அல்லது பிளாகரில் ஏதேனும் ஒன்றில் எப்படி வெப்சைட் உருவாக்குவது என தெரிந்திருக்க வேண்டும்.
  3. நீங்கள் விரும்பும் தலைப்பு மற்றும் டொமைன் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. தேர்ந்தெடுத்த பின்னர் அவற்றை முறையே  ஹோஸ்டிங்  தரும் நிறுவனத்திடம் சந்தாவை செலுத்தி வாங்க வேண்டும்.

உங்கள் வெப்சைட்டிற்கு சரியான ஹோஸ்டிங் தளத்தை தேர்ந்தெடுக்க:

how to create website in tamil

 ஹோஸ்டிங் என்பது உங்கள் வெப்சைட்டை உருவாக்கி அதை சேமித்து வைத்திருக்கும்  தளம் ஆகும்.

உங்களிடம் ஹோஸ்டிங் சேவை இல்லையென்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தை தேர்வு செய்யலாம் இல்லை என்றால் நீங்கள் வைத்திருக்கும் சேவை நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

 தேர்வு செய்த நிறுவனத்தில் ஹோஸ்டிங் சந்தாவை செலுத்தி வருடத்திற்கு அல்லது மாதத்திற்கு உங்களின்  ஹோஸ்டிங் பிளானை உறுதி செய்யலாம்.

இந்தியாவில் பல விலை குறைந்த தரமற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் உள்ளன. எச்சரிக்கையாக உங்களின் ஹோஸ்டிங்கை முடிவு செய்யுங்கள்.

உங்களுக்கு வேர்ட்பிரஸ் அல்லது பிளாகரில் ஏதேனும் ஒன்றில் எப்படி வெப்சைட் உருவாக்குவது என தெரிந்துகொள்ள

 ஒரு பிளாக் உருவாக்க வேர்ட்பிரஸ் அல்லது  பிளாகர்  தேவை. இந்த இரு தளத்தில் ஏதேனும் ஒன்றில்தான் நமது வெப்சைட்டை உருவாக்க முடியும்.

 பிளாகர் என்பது இலவசமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் தரும் தளம். இதில் நீங்கள் உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட  டொமைனை இணைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த ப்ளாகர் உங்களுக்கு அதிக பலன்களைத் தராது. எனவே முதலீடு செய்து வெப்சைட் உருவாக்க நினைப்பவர்கள் வேர்ட்பிரஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம்.

WordPress

வேர்ட்பிரஸ் தளத்தை நீங்கள் வாங்கும் ஹோஸ்டிங் நிறுவனமே இலவசமாக தரும். இதில் நீங்கள் சுலபமாக உங்களின் வெப்சைட்டை வடிவமைக்கலாம் எந்த ஒரு முன் அனுபவமும் தேவை இல்லை.

 உங்கள் வெப்சைட்டின் தலைப்பு மற்றும் டொமைன் பெயர் தேர்ந்தெடுக்க

domain name suggestion

டொமைன் பெயர் தேர்ந்தெடுக்கும் முன் உங்களின் வெப்சைட்டின் ஐடியாவை வைத்து பெயரை தேர்ந்தெடுக்கவும்

 எ.கா

 நீங்கள் தேர்ந்தெடுக்கும்  ஐடியா உணவு பற்றியது என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும்   டொமைன்ல் உணவு என்ற வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும் .

தேர்ந்தெடுத்த பின் 

 உங்களது ஐடியா,இங்கிலீஷ் டொமைன் மற்றும் வேர்ட்பிரஸ் அல்லது பிளாகரை முடிவு செய்த பின்னர் நீங்கள் சரியான ஹோஸ்டிங் தேர்ந்தெடுக்க வேண்டும் நம்மில்  பலர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் தவறான ஹோஸ்டிங்கை தேர்ந்தெடுப்பது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஐடியா, டொமைன் மற்றும் வேர்ட்பிரஸ் அல்லது பிளாகர் சிறந்ததாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹோஸ்டிங் சிறந்ததாக இல்லை எனில் உங்கள் உழைப்புக்கு பலன் இல்லை.

இந்தியாவில் சிறந்த ஹோஸ்டிங் தரும் நிறுவனங்கள்

  1. Hostinger
  2. Godaddy
  3. Hostgator
  4. Bluehost
  5. Bigrock 

இந்த நான்கு வழிமுறைகளை பின்பற்றி உங்களது வெப்சைட்டை  10 நிமிடத்தில்  எளிதில் உருவாக்கலாம். இவைதான் ஒரு வெப்சைட் ஆரம்பிப்பதற்கு தேவையான வழிமுறைகள் 

அடுத்த பதிவில் வேர்ட்பிரஸ் மூலம் எப்படி வெப்சைட் உருவாக்குவது என படிப்படியாக நாம் பார்க்கலாம்

 இந்த பதிவில் வெப்சைட் தொடங்குவது எப்படி தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு இந்த பதிவு  பிடித்து இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமூக வலைதள பட்டன்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். 

Spread the love

1 thought on “How to create a website in 10 mins in Tamil | வெப்சைட் தொடங்குவது எப்படி?”

Leave a Comment